×

செகண்ட்ஸ் பனியன் ரோல் விற்பனையில் தொழில் துறையினர் ஆர்வம்

திருப்பூர்,மே7: திருப்பூரில் இயங்கி வரும் பனியன் உற்பத்தி நிறுவனங்கள், தங்களிடம் மீதமாகும் பனியன் ரோல்களை சிறு உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பனியன் துணி ரோல்களில் மீதமாகும் துணிகளை அப்படியே 2ம் தர வர்த்தகர்களுக்கு விற்பனை செய்து விடுவதால், இந்த துணி ரோல்களை மொத்தமாக வாங்கும் சிறு உற்பத்தியாளர்கள் அதை  வாங்கி, தனித்தனி டிசைன்களாக உருவாக்கி, வெட்டி, தைத்து பனியன் ஆடைகளை தயாரிக்கும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 இந்த முறையில் சாயமேற்றும் பணிகள் இல்லை என்பதால், பனியன் ரோல்களை வாங்கி புதிய ஆடைகளை உருவாக்குவது எளிது என்பதாலும் இந்த வகை வர்த்தகம் திருப்பூரில் அதிகரித்து வருகிறது.

திருப்பூரில் இதற்காக டெய்லர்கள், கட்டிங் மாஸ்டர்கள், செக்கிங் ஆட்கள் தேவைப்படுவதால், மீண்டும் ஆட்கள் தேவை பலகைகள் திருப்பூரில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பனியன் ரோல்களை மொத்தமாக வாங்கும்போது அவற்றின் தரம், நிறம், டிசைன் பார்த்து வாங்குவதால் குறைந்த செலவில் டி சர்ட் போன்ற ஆடைகளை உருவாக்கி உள்நாட்டு வர்த்தகத்தில் விற்பனைக்கு அனுப்பி வைக்க எளிதாக உள்ளது. எனவே செகண்ட் பனியன் ரோல்களை வாங்கும் வர்த்தகர்களுக்காக தனிப்பிரிவுகளை உருவாக்கி, அந்த பனியன் ரோல்களை விற்பனை செய்ய பெரிய அளவில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Tags : Industry entrepreneurs ,phase rolls ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்